எங்கள் நோக்கு
"சேவை பெறுநர் திருப்தி மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் சிறப்பான அரச சேவையின் ஊடாக சட்டத்தை மதிக்கும் மக்கள் சமூகத்தை உருவாக்கல் "எங்கள் பணிக்கூற்று
"அரச கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பயன்தரு அணுகுமுறைகளின் ஊடாக மனித மற்றும் பெளதீக வள ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட முகாமைத்துவம் ஊடாக பிரதேசத்தில் மக்களின் வாழ்வை மேம்படுத்தல் "நிறுவன கட்டமைப்பு
ஹாரிஸ்பத்துவ பிரதேச துணை மாவட்ட செயலாளர் பிரிவின் கீழ் காணப்பட்ட முப்பத்தி ஏழு (37) பிரிவுகள் பிரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டில் பூஜாபிட்டிய மேலதிக பிரதேச துணை மாவட்ட செயலாளர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அது பட்டுகொட கமநல சேவை நிலையத்தில் 1998.01.01 திகதி அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பூஜாபிட்டிய பிரதேச துணை மாவட்ட செயலாளர் பிரிவாக நடாத்தி செல்லப்பட்டுள்ளது.பின்னர் பட்டுகொட கமநல சேவை நிலையத்திற்கு சொந்தமாக்கி கொள்ளப்பட்ட இடத்தின் பகுதியொன்று பெறப்பட்டு தற்போதுள்ள கட்டிடம் கட்டப்பட்டது.1989 ஆம் ஆண்டில் அக் கட்டிடத்திற்கு அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.1996 ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு திருத்தத்தின் போது கிராம நிலதாரி பிரிவு 67 ஆக மாற்றம் பெற்றுள்ளது.1992 ஆம் ஆண்டில் நிர்வாக பன்முகப்படுத்தலின் கீழ் பிரதேச செயலாளர் பிரிவாக அறிவிக்கப்பட்டது.இதன் முதலாவது பிரதேச செயலாளராக திருமதி சந்திரலதா உபேசேகர அவர்கள் 1992.08.18 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பணியாற்றிய பிரதேச செயலாளர்கள்
| பெயர் | தொடக்கம் | வரை |
| திரு.டப்.ஜே.ராஜகருணா | 1981.12.31 | 1992.08.18 |
| திருமதி சந்திரலதா உபேசேகர | 1992.08.18 | 2000.02.28 |
| திருமதி ஸ்வர்ணா ஒபேசேகர | 2000.06.01 | 2002.02.21 |
| திருமதி எச்.பீ. தயா மெனிகே சரத்சந்திர | 2002.04.25 | 2011.12.31 |
| திருமதி சீ.எச்.குருகுல ஆரச்சி | 2012.01.02 | 2012.02.29 |
| திருமதி டப்.எம்.எம்.மடஹபொல | 2012.03.08 | 2021.01.05 |
| திருமதி.டீ.வத்சலா மாரபகே | 2021.01.06 | 2022.11.20 |
| திரு.ஆர்.டப்.பீ.எம்.தர்மதாச | 2022.11.21 | 2022.11.23 |
| திரு.டீ.எம்.கே.பீ.வீரசிங்க | 2022.11.24 | 2024.02.01 |
| திருமதி.டீ.எம்.எஸ்.கே.தீகல | 2024.02.06 | தற்போது வரை |















